நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெட்ரோல், டீசர் மீதான வரியைக் குறைக்கப்போவதில்லை என பாஜக அரசு தெரிவித்துள்ளது.
எனவே மாநில, மத்திய அரசுகளின் வரி விகிதம் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையில்60 % மாகவும், டீசல் விற்பனையில் 54 % மாகவும் உள்ளது.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில். கண்ணுக்கெட்டாத் தொலைவில் பறப்பவை எவை என்கிறீர்களா? பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டுக்கும் பக்கத்தில் பறப்பது சமையல் எரிவாயுதான். ஏழைகளின் வயிறு எரிவதற்கு எந்த வாயுவும் தேவையில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு? அந்த நெருப்பு ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக மூத்த அரசியல்வாதியும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவருமான தா, பாண்டியனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் உடல்நிலை குறித்து வரும் தகவல்கள் கவலையளிக்கின்றன. அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.