நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் திரைப்படம் “பார்டர்”. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் படம் இந்த “பார்டர்”. இந்த படத்தின் அறிமுக விழா சென்னை பார்க் ஹோட்டலில் வித்தியாசமான முறையில் நடந்தது.