தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்பொது, ஹெச். வினோத் இயக்கத்தில், போனிகபூர் இயக்கத்தில், தொடர்ந்து 3 வது முறையாக கூட்டணி அமைத்துள்ள நிலையில், இப்படத்தின் தலைப்பு துணி என்று உறுதி செய்யப்பட்டு, சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானது.
அதனைத்தொடர்ந்து, முழுவீச்சில் படப்பிடிப்புகள் நடந்த நிலையில், இன்றுடன் துணிவு படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இந்த நிலையில், அஜித்61 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பதாக தகவல் வெளியானது.
தற்போது, திருமணம் முடிந்து, செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட பணிகளை எல்லாம் முடித்துவிட்டு, இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ள மகிழ்ச்சியில் இருக்கும் விக்னேஷ் சிவன், அஜித்குமாருடன் தன் அடுத்த படத்தை தொடங்க தயாராகியுள்ளார்.
இன்று, தன் டிவிட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் புகைப்படத்தைப் பகிர்ந்து, புயலுக்கு முன் அமைதி என்று குறிப்பிட்டுள்ளார். விரைவில் அஜித்62 படம் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.