தேனி பாராஸ்ட் ரோடு பகுதியில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதை மர்ம நபர்கள் சாணி அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்று அஜித் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமமுக நிர்வாகியான ஜெயமணியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஜெயமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஜெயமணியின் மகன் சூர்யா அஜித் ரசிகர்களை செல்போனில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் குரல் பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.