கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார்.
நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா, சமூகவலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களுக்காகவும் கவனிக்கப்பட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் தன்னுடைய புதிய புகைப்படத்தை வெளியிட்டு வெயில்காலம் வந்துவிட்டது எனக் கூறியுள்ளார்.