மதராசப் பட்டணம் படம் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன் தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற மகன் உள்ளார். மகன் பிறந்த பின்னர் எமி, தன்னுடைய காதலரை பிரிந்தார். அவரின் மகன் எமி ஜாக்சனோடு வளர்ந்து வந்தார்.