இப்பட ஷூட்டிங்கின்போது, நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஓய்வெடுக்க வெளி நாடு சென்றிருந்தார்.
பின்னர், புத்தாண்டு முடிந்து நடிகர் சூர்யா, சென்னை திரும்பிய நிலையில், சமீபத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சியில் பங்கேற்கு கலைஞர் பற்றி பேசினார்.
இப்படம் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக்கிழமை ரிலீசாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ''ஹாலிவுட் ஸ்டைலில் இப்படம் உருவாகி வருவதாக'' தயாரிப்பாளர் சமீபத்தில் கூறிய நிலையில், இப்படம் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.