கங்குவா ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கும்- ஞானவேல் ராஜா

செவ்வாய், 12 டிசம்பர் 2023 (18:22 IST)
சூர்யா நடிப்பில்  சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் கங்குவா. சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது
 

இப்பட ஷூட்டிங்கின்போது,  நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஓய்வெடுக்க மும்பை சென்றதாக தகவல் வெளியாகிறது.

இதற்கிடையே இப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது. எனவே இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக் கிழமை  ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், கங்குவா படம் ஹாலிவுட் படத்திற்கு இணையாக இருக்கும் என ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: ‘’கங்குவா ஒரு சிறப்பான தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். இது ஃபேண்டசியுடன் கூடிய வழக்கமான ஆக்சன் படம் மற்றும் பிரமாண்ட மேக்கிங் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.  படத்தில் நிறைய விஎஃப்.எக்ஸ் காட்சிகள் இருப்பதால் இது ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்