இந்த நிலையில் தற்போது நடிகர் போண்டாமணியின் இரு சிறுநீரகங்கள் செயலிழந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு நிதியுதவி செய்து உதவி செய்யும்படி நடிகர் பெஞ்சமின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வேண்டுகோள் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.