கார்த்தியின் அடுத்த பட டைட்டில் இதுதான்: வீடியோ வெளியீடு

ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (12:57 IST)
கார்த்தியின் அடுத்த பட டைட்டில் இதுதான்: வீடியோ வெளியீடு
தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவராகிய கார்த்தி நடித்த சுல்தான் சமீபத்தில் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது 
 
கார்த்தியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த டைட்டில் மோஷன் போஸ்டரில் இருந்து அவருடைய அடுத்த படத்துக்கு ’சர்தார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது 
கார்த்திக் ஜோடியாக ராஷிகண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் நடித்துள்ள இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ளார். ஏற்கனவே இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரில் இருந்து இதுவும் பிஎஸ் மித்ரனின் வழக்கமான பாணியிலான டெக்னாலஜி படம் என்பது தெரிய வருகிறது .இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Excited to be joining hands with @Psmithran on this biggie. Revealing the first look for you all. Lots of love!#Sardar #SardarFirstLook - https://t.co/xcjhxcPWt8 #staysafe

— Actor Karthi (@Karthi_Offl) April 25, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்