கார்த்தியின் படம் ஓடிடியில் ரிலீஸ்.... ரசிகர்கள் ஆர்வம்

வியாழன், 22 ஏப்ரல் 2021 (00:01 IST)
எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர். முதல் படத்தைப் போல இல்லாமல் ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் கலந்த படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், கார்த்தியின் சுல்தான் படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதில் ஹாட் ஸ்டாரில் ரிலீஸாகும் எனக் கூறப்படுகிறது.

அதுபோல் சுல்தான் தெலுங்கு வெர்சன் Aha ஒடிடி தளத்தில் ரிலீஸாகும் எனத் தெரிகிறது. இதனால் தியேட்டருக்கு வர முடியாத ரசிகர்கள் இப்படத்தை ஒடிடியில் பார்த்து மகிழ ஆர்வமுடன் உள்ளனர்.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்