மலேசிய பேட்மி‌ன்டன் - அரை‌யிறுதியில் வெ‌‌ளியே‌றினா‌ர் சாய்னா

ஞாயிறு, 20 ஜனவரி 2013 (10:44 IST)
FILE
கோலாலம்பூரில் நடந்து வரு‌ம் மலேசிய ஓபன் பேட்மி‌ன்டன் போட்டி‌யி‌ல் பெண்கள் ஒற்றையர் அரை‌யிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், ‌சீன தையே ‌வீரா‌ங்கனையுட‌ன் தோ‌ல்‌வி அடை‌ந்து வெ‌ளியே‌றினா‌ர்.

6ம் நிலை வீராங்கனை சு இங் தாயை, சா‌ய்னா நேவா‌ல் சந்தித்தார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 20-22, 14-22 என்ற நேர்செட்டில் சீன தைபே வீராங்கனை சு இங் தாயிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

சு இங் தாயிடம், சாய்னா தோல்வியை சந்திப்பது இது 2வது முறையாகும். ஏற்கனவே 2011ம் ஆண்டில் நடந்த டென்மார்க் ஓபன் போட்டியில் அவரிடம் தோல்வி கண்டு இருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்