டென்மார்க் மற்றும் பிரெஞ்ச் ஓபன் பேட்மின்டன் தொடர்களில் பங்கேற்று 12 நாட்களில் 10 போட்டிகளில் விளையாடிய இந்திய பேட்மின்டன் சாம்பியன் சாய்னா நெவால் சீன ஓபன் போட்டிகளிலிருந்து விலகினார்.
நவம்பர் 13 முதல் 18ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. முழங்கால் காயம் இன்னும் சரியாகாத காரணத்தினால் சாய்னா நெவால் விலகியுள்ளார்.
அவருக்கு சீன ஓபனில் 3ஆம் தரநிலை வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 20ஆம் தேதி துவங்கும் ஹாங்காங் ஓபனுக்கு சாய்னா மீண்டும் பங்கேற்க வருகிறார்.