ஜோகோவிச்சை வீழ்த்தி ரோடிக் அரையிறுதியில்

இண்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை, அமெரிக்க வீரர் ஆன்டி ரோடிக் நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

68 நிமிடங்களில் ஆன்டி ரோடிக் 6- 3, 6- 2 என்ற செட்களில் ஜோகோவிச்சை ஊதித் தள்ளினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை வெரா ஸ்வொனரேவா பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவை 6- 3, 6- 3 என்ற செட்களில் வீழ்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்