இறுதியில் பயஸ் இணை தோல்வி!

திங்கள், 16 ஜூன் 2008 (11:48 IST)
ஜெர்மனியில் நடைபெற்ற கெர்ரி வெபர் டென்னிஸ் இரட்டையர் இறுதிப் போட்டியில் பயஸ்-லூகாஸ் லூயி இணை தோல்வி தழுவியது.

ரஷ்ய- ஜெர்மனி இணையான மிகைல் யூஸ்னி, மிஷ்சா ஸ்வரேவ் இணை, இந்திய- செககுடியரசு இணையான பயஸ்-லூயி இணையை 6-3, 4-6, 3-10 என்ற செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

முதல் செட்டில் இரண்டு முறை சர்வ்களை முறியடித்து அந்த செட்டைக் கைப்பற்றினர் பயஸ்- லூயி இணை. ஆனாலஇரண்டாவது செட்டில் பயஸ்- லூயி இணை சர்வ்களில் சோடை போனது. அதன் பிறகு டை பிரேக்கரிலும் சரிவர ஷாட்கள் அமையவில்லை, இதனால் தோல்வி தழுவியது.

வெப்துனியாவைப் படிக்கவும்