தரவரிசையில் சானியா முன்னேற்றம்!

செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (10:47 IST)
இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் டென்னிஸ் தரவரிசைகளில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

மணிக்கட்டு அறுவை சிகிச்சை காரணமாக ஒரு மாதம் டென்னிஸ் விளையாட முடியாத நிலையில் உள்ள சானியா மிர்சா ஒற்றையர் தரவரிசையில் ஒரு இடம் முன்னேறி 30வது இடத்திற்கு வந்துள்ளார்.

இரட்டையர் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 19வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஆடவர் இரட்டையர் உலக தரவரிசையில் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோர் முறையே 13வது மற்றும் 24வது இடத்தை தக்க வைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்