நான்காவது போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றிய இந்தியா!

vinoth

சனி, 1 பிப்ரவரி 2025 (07:11 IST)
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடிவருகிறது. 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இந்த தொடரில் முன்னிலை வகித்த நிலையில் நேற்று நடந்த நான்காவது போட்டியையும் வென்று தொடரைக் கைப்ப்ற்றியுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9  விக்கெட்களை இழந்து 181 ரன்கள் சேர்த்தது.  இந்திய அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தாலும் ரிங்கு சிங், ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு இந்திய அனியின் ரன்னை உயர்த்தினர். ஷிவம் துபே 54 ரன்களும் ஹர்திக் பாண்ட்யா 53 ரன்களும் சேர்த்தனர்.

இதன் பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே சேர்த்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.  இந்திய அணி சார்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்