தோனி நடித்த விளம்பரத்தில் சர்ச்சை; ஹர்பஜன் நோட்டீஸ்

திங்கள், 18 ஜூலை 2011 (18:31 IST)
இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி நடித்துள்ள விஜய் மல்லையாவின் யுனைடெட் பிரவரீஸ் (UB) குழுவிளம்பரத்தை எதிர்த்து ஹர்பஜன் சிங் வழக்கறிஞர்கள் மல்லையா நிறுவனத்திற்கு தாக்கீது அனுப்பியுள்ளனர்.

இந்தத் தாக்கீதை ஹர்பஜன் சிங்கின் தாயார் அவ்தார் கௌர் அனுப்பியுள்ளார். மேலும் இது போன்ற விளம்பரங்கள் இந்திய அணியில் உரசல்களையும், ஒற்றுமையின்மையையும் ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் நடித்துள்ள ராயல் ஸ்டேக் விளம்பரத்தைக் கேலி செய்யுமாறு விஜய் மல்லையாவின் நிறுவன விளம்பரம் உள்ளது. இதில் தோனி நடித்துள்ளார்.

தோனி நடித்துள்ள விஜய் மல்லையா நிறுவன விளம்பரம் ஹர்பஜன் சிங்கையும், அவரது குடும்பத்தினரையும் சீக்கிய சமூகத்தையும் இழிவு படுத்துவதாக உள்ளது என்று ஹர்பஜன் சிங் வழக்கறிஞர்கள் தங்கள் தாக்கீதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், இந்த விளம்பரம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்