நாக்பூரில் நடைபெறும் உலகக் கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் நியூஸீலாந்தின் 207 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆஸ்ட்ரேலியா சற்று முன் வரை 16-வது ஓவரில் விக்கெட் இழப்பின்றி 115 ரன்கள் எடுத்துள்ளது.
ஷேன் வாட்சன் 52 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 53 ரன்களுடனும், பிராட் ஹேடின் 42 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர்.
வெட்டோரி துவக்கத்தில் வீசி பயனற்று போனது, அவர் 3 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
டிம் சவுத்தீ மோசமாக வீசி 5 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக் கொடுத்தார். ஹாமிஸ்க் பென்னெட் அனைவரையும் விட மோசம், இவர் 3 ஓவர்களே வீசி 28 ரன்களைக் கொடுத்தார்.
நேதன் மெக்கல்லம் பந்து வீச்சும் எடுபடவில்லை இவர் 3 ஓவர்களில் 22 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.
ரைடர் 2 ஓவர்கள் வீசி 11 ரன்களை கொடுத்துள்ளார். மொத்தத்தில் நியூஸீலாந்து பந்து வீச்சில் ஒன்றுமேயில்லை.