சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தார்

வியாழன், 14 அக்டோபர் 2010 (13:02 IST)
சமீப காலமாக அடுத்துடுத்து சதங்களையும் இரட்டைச் சதங்களையும் அடித்து வரும் சச்சின் டெண்டுல்கர் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

நேற்று முடிந்த ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 403 ரன்கள் எடுத்தார் சச்சின் டெண்டுல்கர்.

தனது 6-வது இரட்டைச் சதத்தை எடுத்த சச்சின் டெண்டுல்கர், சேவாகை சமன் செய்தார். சச்சின் டெண்டுல்கர் தற்போது 891 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.

சேவாக் 819 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளார். சங்கக்காரா 874 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்