பெங்களூர் கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே குண்டு வெடித்ததாலும், மைதானத்திற்குள் இரண்டு குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாலும், ஐ.பி.எல். அரையிறுதி கிரிக்கெட் போட்டிகள் மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்திற்கு மாற்றப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவங்கள் சிறிய அளவில் இருந்தாலும், தொடர்ந்து அங்கு போட்டிகளை நடத்த இயலாது. மேலும் வீரர்கள் மற்றும் பார்வையாளரகளின் பாதுகாப்பு முக்கியம் என்று லலித் மோடி தெரிவித்துள்ளார்.
இது பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட தவறு என்பதாலும், ஒரு அயல் நாட்டு வீரர் அன்று களமிறங்க மறுத்தார் என்று கூறப்படுவதாலும் இந்த முடிவிற்கு ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி வந்துள்ளதாகத் தெரிகிறது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளின் வாரியங்கள் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால் 2011 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கிடையே அரையிறுதிப் போட்டிகளை கர்நாடகாவிலிருந்து மும்பைக்கு மாற்றியது குறித்து கர்நாடக மாநில முதல்வர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.