இதையடுத்து அஸ்னோட்கருடன் ஷேன் வாட்சன் இணைந்தார். இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். 32 ரன்கள் எடுத்திருந்த வாட்சன், பிராவோ பந்தில் போல்டு ஆனார். இவர் ஒரு சிக்சர், 4 பெளண்டரிகளை விளாசினார்.
இவரை தொடர்ந்து ராஜஸ்தான் வீரர்கள் யாரும் சரியாக விளையாட வில்லை. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த அஸ்னோட்கர் 39 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து 16.2 ஓவரில் ராஜஸ்தான் அணி 103 ரன்களுக்கு சுருண்டது. ஐ.பி.எல். தொடரில் எடுக்கப்பட்ட 2-வது குறைந்த பட்ச ரன் எண்ணிக்கை இதுவாகும்.
மும்பை அணி தரப்பில் நெக்ரா 3 விக்கெட்டுகளும், குல்கர்னி, பிராவோ, ரஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஜெயசூர்யா- தகவாலே முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்தனர். ஜெயசூர்யா 18 ரன்கள் எடுத்திருந்தபோது வாட்சன் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் தகவாலே 21 பந்துகளில் 34 ரன்கள் குவித்து அவுட்டானார். இவர் ஒரு சிக்சர், 4 பெளண்டரிகளை விளாசினார்.
15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 34 ரன்களுடன் உத்தப்பாவும், 12 ரன்களுடன் நாயரும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர்.
ஆட்ட நாயகனாக நெக்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் 4 ஆட்டத்தில் தொடர்ந்து தோல்வி அடைந்த மும்பை அணி தற்போது ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது.
அதே சமயம் ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு மும்பை அணி நேற்று முற்றுபுள்ளி வைத்தது.