ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி: இந்திய அணியில் பஜ்ரங் புனியாவுக்கு இடமில்லையா?

புதன், 3 ஜனவரி 2024 (08:15 IST)
ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணியில் பஜ்ரங் புனியாவுக்கு இடமில்லை என்ற தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
முதலாவது உலக ரேங்கிங் போட்டியான ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி குரோஷியா நாட்டில் ஜனவரி 10 முதல் 14 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட  கமிட்டி அறிவித்துள்ளது
 
 இந்த அணியில் 13 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்ற ப பஜ்ரங் புனியா மற்றும் சீனியர் உலக போட்டிகள் வெண்கல பதக்கம் பெற்ற அன்திம் பன்ஹா ஆகிய இருவரும் இடம் பெறவில்லை. 
 
ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் பங்கேற்கும் இந்தியன் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின்  விபரங்கள் இதோ
 
ஆண்கள் பிரீஸ்டைல்: அமன் (57 கிலோ), யாஷ் (74 கிலோ), தீபக் பூனியா (86 கிலோ), விக்கி (97 கிலோ), சுமித் (125 கிலோ).கிரீகோ ரோமன்: ஞானேந்தர் (60 கிலோ), நீரஜ் (67 கிலோ), விகாஸ் (77 கிலோ), சுனில் குமார் (87 கிலோ), நரிந்தர் ஷீமா (97 கிலோ), நவீன் (130 கிலோ).
 
பெண்கள் பிரீஸ்டைல்: சோனம் (62 கிலோ), ராதிகா (68 கிலோ).
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்