மகளிர் டி20 உலகக்கோப்பை; பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தோல்வி..!

செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (07:58 IST)
உலக கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 
 
நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 129 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 130 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி இந்திய மகளிர் அணி 15 ஓவர்களில் அனைத்து கேட்டிகளையும் இழந்து 85 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்திய அணியின் 8 வீராங்கனைகள் சிங்கிள் டிஜிட் ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியாவின் டார்சி பிரெளன் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்