இதனை அடுத்து புஜாரா களம் இறங்கி 15 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி களமிறங்கினார் கடந்த சில போட்டிகளில் விராட் கோலி அதிக ரன்கள் எடுக்கவில்லை என்பதால் இந்த போட்டியிலாவது அவர் நன்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர்பாராதவிதமாக செளதி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் 3 ரன்களில் விராத் அவுட் ஆகியது அனைவரையும் அதிருதிக்கு உள்ளாக்கியது
இந்த நிலையில் உணவு இடைவேளை வரை இந்திய அணி 25 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் படுத்த முடியும் என்பதும், அல்லது இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது