டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணியில் இருந்து மூவர் நீக்கம்!

திங்கள், 11 அக்டோபர் 2021 (14:27 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வரும் 16ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதை அடுத்து இந்த போட்டிக்காக அனைத்து நாடுகளின் அணிகள் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அணியில் இருந்து மூன்று வீரர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஏற்கனவே அணியில் இடம்பிடித்திருந்த குஷ்தில் கான், துணை கீப்பர் ஆசாம் கான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, ஹைதர் அலி மற்றும் ஃபக்கார் ஸமான் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
பாகிஸ்தான் அணியின் இந்த மாற்றம் அந்த அணியின் வெற்றிக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்