டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய தென் ஆப்பரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மட்டும் ஒற்றை நபராக இருந்து போராடி சதம் விளாசினார். 153 ரன்கள் குவித்தார்.