இந்நிலையில் சவுரவ் கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தற்போது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக இருந்து வரும் சவுரவ் கங்குலி, பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.
அதற்கேற்ப ஐபிஎல் சேர்மென், முன்னாள் பிசிசிஐ நிர்வாகி ராஜீவ் சுக்லா இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக சவுரவ் கங்குலியை தேர்வு செய்துள்ளோம் என அறிவித்துள்ளார். இது கங்குலில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜே ஷா புதிய செயலாளராகவும், அருண் துமால் புதிய பொருளாளராகவும் இருப்பார்கள். அருண் துமால் பிசிசிஐ முன்னாள் தலைவருமான அனுராக் தாக்கூரின் சகோதரர் ஆவார்.