கடந்த பிப்ரவரி மாதம் கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதி பொதுமக்கள், அரிசி திருடியதாக கூறி மது என்ற ஆதிவாசி நபரை அடித்து கொன்றனர். ஆனால் அரிசி திருடியதாக அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு தவறானது என்று தெரிய வந்ததால் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் அடித்து கொல்லப்படுவது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளங்களில் பார்த்த மக்கள், மதுவை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்தனர். கேரள முதல்வர் பினராஜி விஜயன் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். மேலும் மதுவின் தங்கைக்கு போலீஸ் பணி வழங்கப்பட்டது.