ஐபிஎல் தொடரில் இன்று ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான யாஸ்வி ஜாஸ்மால் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகிய இருவரும் தலா 54 ரன்கள் எடுத்தனர். கேப்டன் சஞ்சு சாம்சன் 55 ரன்கள் எடுத்துள்ளார்.