சிங்கப்பூர், நேபாளம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி 20 போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் நேபாள அணிகள் மோதிக் கொண்டன.
இதுவரை இந்திய முன்னனி வீரர்கள் யாருமே 20 ஓவர்கள் போட்டியில் சதம் அடித்திராத நிலையில் பரஸ் கட்கா இந்த சாதனையை படைத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட ஐசிசி 2010ம் ஆண்டு டி20ல் சுரேஷ் ரெய்னா சதம் அடித்தது ஒன்று மட்டுமே இந்தியாவின் சாதனையாக இதுவரை இருந்து வருவதையும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் டி20 போட்டிகளில் சதம் அடித்த வீரர்களின் பட்டியலையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.