இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை.
இந்த தொடரில் இடம்பெற்றுள்ள கே எல் ராகுலின் பேட்டிங் பங்களிப்பை இந்திய அணி மிகவும் நம்பியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் மின்னல் வேக ஆடுகளங்களை சமாளிப்பதற்காக ராகுல் டென்னிஸ் பந்துகளை வீசி, புல் ஷாட் அடித்துப் பயிற்சி எடுத்துள்ளார். பவுன்ஸர்களை சமாளிப்பதற்காக இந்த வித்தியாசமான பயிற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். இதற்கு முன்னர் இந்திய வீரர்கள் 1990 களில் ஈரமான டென்னிஸ் பந்துகளில் இதுபோல பயிற்சி எடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.