உலக கொரோனா: அமெரிக்காவில் அதிகரிப்பு, இந்தியாவில் குறைவு

திங்கள், 16 நவம்பர் 2020 (07:29 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது
 
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5.4 கோடி என்றும் அதாவது 54,802,583 என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,324,019 என்றும், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  38,128,550 அன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 98,676 ஆகும். 
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.13 கோடியை தாண்டிவிட்டது. இதுவரை கொரோனாவால் அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2.51 லட்சம் ஆகும்
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,845,617 என்றும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1.30 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் உள்ள பிரேசிலில் கொரோனாவுக்கு 5,863,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் இதுவரை அந்நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கௌ 1.65 லட்சம் என்பதும் குறிப்ப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்