கொல்கத்தாவில் அசத்திய இந்திய அணி: 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

வியாழன், 21 செப்டம்பர் 2017 (21:48 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் நிலையில் சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



 
 
இந்த நிலையில் இன்று கொல்கத்தா ஈடன் மைதானத்தில் நடந்த விறுவிறுப்பான போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றியை பெற்றுள்ளது.
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. விராத் கோஹ்லி 92 ரன்களும், ரஹானே 55 ரன்களும் எடுத்தனர்.
 
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதலில் ரன்களை குவித்த போதிலும் குல்தீப் போட்ட ஒரு ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் விழுந்ததால் ஆஸ்திரேலியா தோல்வியை நோக்கி சென்றது. இருப்பினும் கடைசிவரை ஸ்டோன்ஸ் போராடினார். கடைசியில் ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவரில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்