இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்: பாக். மிரட்டல்!!

வியாழன், 21 செப்டம்பர் 2017 (18:50 IST)
இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயங்காது என அந்நாட்டு பிரதமர் அப்பாஸி மிரட்டல் விடுத்துள்ளார்.


 
 
அமெரிக்காவில் நடந்த வெளிநாட்டு கவின்சிலில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர், இந்தியா மீது தாக்குதல் நடந்த ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
மேலும், பாகிஸ்தான் ராணுவம் அணு ஆயதங்களை மேம்படுத்தி சோதனை செய்துள்ளது. குறைந்த தூரம் சென்று தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த அணு ஆயதங்கள், இந்திய ராணுவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
 
அதோடு சேர்த்து ஆசியாவிலேயே முதன்முறையாக அணு ஆயுதங்களை பயன்படுத்திய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்