இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பிப்ரவரி 24ஆம் தேதி பெங்களூரில் 2வது டி-20 போட்டி விளையாட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதே நாளில் பெங்களூருவில் நடைபெறும் விமானப்படை நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதால் இந்த போட்டி 24ம் தேதி பெங்களூருவில் நடப்பதற்கு பதிலாக 27ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.