வருகிற மார்ச் மாதம் 29 ஆம் தேதி, 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதினர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டனுமாகிய தோனி பல மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொள்ளாத நிலையில், இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளார். அதற்காக கடந்த ஒரு வாரமாக சென்னையில் தங்கி பயிற்சியினை மேற்கொண்டு வருகிறார் தோனி.