டெல்லியிடம் தோல்வி அடைந்து வெளியேறியது மும்பை

ஞாயிறு, 20 மே 2018 (20:14 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 55வது போட்டியான இன்றைய முதல் போட்டி மும்பை அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாக இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெறவில்லை என்றால் வெளியேறும் நிலை இருந்த நிலையில் டெல்லி அணியிடம் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
டெல்லி மற்றும் மும்பை அணியின் ஸ்கோர் விபரம்:
 
டெல்லி அணி: 174/4  20 ஓவர்கள்
 
ஆர்.ஆர்.பேண்ட்: 64
விஜய் சங்கர்:44
 
மும்பை அணி: 163/10 19.3 ஓவர்கள்
 
லீவிஸ்: 48
கட்டிங்: 37
 
ஆட்டநாயகன்: அமித் மிஸ்ரா
 
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 5 வெற்றிகள் பெற்று 10 புள்ளிகளுடன் இருந்தாலும், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது மட்டுமின்றி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்