நேற்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த குவாலிஃபயர் ஒன்று போட்டியில் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதனை அடுத்து ஐபிஎல் வரலாற்றில் 10 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்ற பெருமை பெற்றதோடு 10 முறை ஒரு அணியை ஃபைனலுக்கு கொண்டு சென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லீக் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை பெறுவது முக்கியமல்ல, முதலில் ஃபைனலுக்கு யார் செல்வது என்பதுதான் முக்கியம் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் சிஎஸ்கேவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.