புதிய பதவி ஏற்றார் கிரிக்கெட் ’தாதா ‘ கங்குலி ...

புதன், 23 அக்டோபர் 2019 (14:38 IST)
சமீபத்தில், பிசிசிஐ-ன் பொதுக்குழுக் கூட்டம் இன்று  மும்பையில் நடைபெற்றது. இதில்  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 39 வது (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அதிகாரப்பூர்வமாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் மேட்ச் ஃபிக்சிங் புகார்கள் எழுந்து வந்த நிலையில், பிசிசிஐ செயல்பாடுகளை வெளிப்படையாக நடத்தவும், நீதிபதி லோதா குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும் ஒரு குழுவை நியமித்தது.
 
இதனை தொடர்ந்து கடந்த 2017 முதல் சிஓஏ தரப்பு பிசிசிஐ நிர்வாகத்தை மேற்கொண்டு வந்தது. மேலும் அக்டோபர் 23 ஆம் தேதி நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் எனவும் சிஓஏ அறிவித்திருந்தது.
 
தலைமை பதவிக்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி மட்டுமே மனு அளித்திருந்தார். ஆதலால் சவுரவ் கங்குலி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
 
மேலும் சவுரவ் கங்குலி 10 மாதங்கள் மட்டுமே தலைமை பொறுப்பில் இருப்பார் எனவும் கூறப்படுகிறது. மும்பையில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் கங்குலி தலைவர் பதவியை ஏற்றார். இந்நிலையில் அவரது சிஓஏ (Committee of Administrations) பதவியை உடனடியாக நிறைவுக்கு வருகிறது.
 
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக விஜயநகரம் மகாராஜாவுக்குப் பிறகு இரண்டாவடாக தேர்ந்தெடுக்கபட்ட இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலத்தில் பேசும் பெங்காலி மொழியில் ’தாதா’ என்றால் ’அண்ணா’  என்று பொருளாகும்.
 
 

It's official - @SGanguly99 formally elected as the President of BCCI pic.twitter.com/Ln1VkCTyIW

— BCCI (@BCCI) October 23, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்