கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற வங்கதேசம்: ஜிம்பாவே போராட்டம் வீண்

ஞாயிறு, 30 அக்டோபர் 2022 (12:18 IST)
கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற வங்கதேசம்: ஜிம்பாவே போராட்டம் வீண்
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே மற்றும் வங்கதேச அணிகள் இன்று மோதிய நிலையில் வங்கதேச அணி கடைசி பந்தியில் திரில் வெற்றி பெற்றது. 
 
இன்றைய போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜிம்பாவே அணி 151 என்ற இலக்கை நோக்கி விளையாடியது.
 
இந்த நிலையில் கடைசி ஓவரில் ஜிம்பாப்வே அணி 16 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்த வங்கதேச அணி 2-வது பந்தில் விக்கெட்டை இழந்தது. ஆனால் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்தால் 2 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது 
 
ஆனால் ஐந்தாவது பந்தில் வங்கதேச அணி விக்கெட்டை இழந்த நிலையில் ஆறாவது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனை அடுத்து வங்கதேச அணி புள்ளி பட்டியலில் தற்போது நான்கு புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்