டி-20 உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி ஜிம்பாவே த்ரில் வெற்றி!

வியாழன், 27 அக்டோபர் 2022 (20:42 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட்   நடந்து வரும் நிலையில் இன்றைய  மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாவே அணி.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து அந்த அணி களத்தில் இறங்கிய 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் அணியின் முகமது வாசிம் மிக அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அதேபோல் ஷதீப்கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பின்னர், 131 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

ஏற்கனவே இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த அணியில், ஷான் மாசூட் 44 ரன்களும், நவாஸ் 22 ரன்களும்,ஷதாப் கான் 17 ரன்களும் அடித்தனர். பெரிதும் எதிர்பார்த்த பாபர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன் கள் மட்டுமே எடுத்து தோற்றது.

ALSO READ: ஜிம்பாவே கொடுத்த எளிய இலக்கு: பாகிஸ்தான் வெற்றி பெறுமா?

எனவே, ஜிம்பாவே 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி இன்னும் ஒரு புள்ளியை கூட எடுக்காத நிலையில் இன்றைய போட்டியிலும் தோற்றுள்ளது.


Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்