இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது. அந்த அணி 44 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. இதன் பின்னரும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது
முதல் நாளில் லாபுசாங்கே 67 ரன்கள் எடுத்தார். ஸ்மித் 60 ரன்களும், ஹெட் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து அணியின் பிராட் அபாரமாக பந்துவீசி இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஓவர்டன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.