ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்து 'பிரெக்ஸிட்' மசோதாவை தாக்கல் நாடாளுமன்றத்தில் செய்தது. இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற பலமுறை ஓட்டெடுப்பு நடத்திய முன்னாள் பிரதமர் தெரசா மே அம்முயற்சியில் தோல்வி அடைந்ததால் தெரசா மே கடந்த மாதம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் எந்த சூழ்நிலையிலும் அக்டோபர் 31ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என்று அறிவித்தார். ஆனால் பிரெக்ஸிட் ஒப்பந்ததை நிறைவேற்ற பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வந்ததால் அவரால் மசோதாவை தாக்கல் செய்ய முடியவில்லை
இந்த நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் எம்.பி பிலிப் லீ என்பவர் திடீரென் நேற்று லிபரல் டெமாக்ரட்ஸ் கட்சியில் இணைந்தார். இதனால், நாடாளுமன்றத்தில் போரிஸ் ஜான்சன் பெரும்பான்மையை இழந்துள்ளார். பிரெக்ஸிட் ஒப்பந்ததை எதிர்த்தே எம்.பி பிலிப் லீ, லிபரல் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதனால் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.