ஆஷஸ் தொடர்.. மார்க்வுட் அபார பந்துவீச்சில் 263 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலியா..!

வெள்ளி, 7 ஜூலை 2023 (07:44 IST)
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடர் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூலை 6ஆம் தேதி தொடங்கியது. 
 
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 60 ஓவர்களில் 263 ரன்கள் ஆட்டம் இழந்தது. மிட்செல் மார்ஷ் மிக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 
 
இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் மார்க்வுட் அபாரமாக பார்த்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிரிஸ் வோக்ஸ் மூன்று விக்டெட்டுகளையும் ஸ்டார்ட் பிராட் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 
 
இந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 19 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்