இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்த நிலையில் விராட் கோலியும் 44 வது சதம் அடித்துள்ளார், இவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், இஷான் கிஷான் 123 பந்துகளுக்கு 210 ரன்கள் தன் பெஸ்டை வெளிப்படுத்தினார்.
அதேபோல் ஒரு நாள் போட்டியில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு, விராட்கோலி 91 பந்துகளில் 113 ரன்கள் அடித்து அசத்தினார். இவர்கள் இருவரும், வங்கதேச அணிக்கு சிம்மசொப்பனமாக இருந்தனர்.இதையடுத்து, தற்போது கே எல் ராகுலும், வாஷிங்டன் சுந்தரும் விளையாடி வருகின்றனர்.