இருப்பினும் சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா உள்ளிட்டோர் சொதப்பியதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் 240 மட்டுமே வந்துள்ளது. உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் 240 என்பது மிகவும் குறைவான ஸ்கோர் என்றாலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களான பும்ரா, ஷமி, குல்தீப் யாதவ், சிராஜ், ஜடேஜா உள்ளிட்டோர் மாயாஜாலம் செய்து ஆஸ்திரேலியா அணியை கட்டுப்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்