மனிதனாக பிறந்து விட்ட அனைவரின் பிறவி தோஷங்களை போக்குவது தான் பிரதோஷம். மற்ற நாட்களிலும், நேரங்களிலும் சிவபெருமானை வழிபடுவதற்கும் இந்த “பிரதோஷ நேரம்” மற்றும் அது வரக் கூடிய கிழமைகளில் வழிபடுவதற்கும் வித்தியாசம் உள்ளது.
வியாழன் பிரதோஷம் வருகிற போது மாலை 4.30 மணியிலிருந்து 6.00 மணிக்குள்ளாக சிவன் கோவிலில் இருக்கும் நவகிரக சந்நிதி களில், மஞ்சள் நிற பூக்களை வைத்து, 27 வெள்ளை கொண்டைக் கடலைகளை நிவேதித்து வணங்க வேண்டும்.
பின்பு நந்தி பகவான் சிவபெருமான், அம்மன் மற்றும் தட்சிணாமூர்த்தி ஆகியவர்களை வணங்க பொருளாதார பிரச்சனைகள், திருமணத்தடை, புத்திரபேறு இல்லாமை போன்ற பிரச்சனைகள் நீங்கும்.