தகுதி உடையவர்கள் தமது தானம், தவம் முதலியவற்றால் உயர்நிலையை எளிதில் அடைந்துவிடுவர். தகுதி இல்லாதவர்கள், வினைப்பயன்களால் துன்புறுபவர்கள் இறைவனின் திருவடியை அடைவது எளிதன்று.
சிவபெருமானே ஜகத் குரு என்று போற்றப்படுபவர். அவரே சனகாதி முனிவர்களுக்கு பிரம்மம் குறித்து உபதேசம் செய்தவர். சிவபெருமானுக்கு மொத்தம் எட்டு சீடர்கள் என்கிறது சைவ சித்தாந்த மரபு. சனகா, சனாதன, சனந்தனா, சனத்குமாரா, திருமூலர், வியாக்ரபாதா, பதஞ்சலி என்பவர்களோடு முதன்மைச் சீடராக விளங்குபவர் நந்தி தேவர்.