சித்திரை திருவிழாவின் இரு முக்கிய நிகழ்வுகள் என்ன தெரியுமா...?

வியாழன், 14 ஏப்ரல் 2022 (13:05 IST)
ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் பன்னிரண்டு நாட்கள், மதுரையில் ‘சித்திரை திருவிழா’ நடைபெறுகிறது.


கள்ளழகர் மதுரை வந்து வைகை ஆற்றில் இறங்குவதற்கான புராணக்கதை கூறப்படுகின்றன.

மதுரை மாநகரில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருமாலின் அவதாரமாக விளங்கும் சுந்தரராஜப்பெருமாள் தன் தங்கை மீனாட்சியின் திருமணத்தை காணவும், சீதனம் கொடுப்பதற்காகவும் அழகர்மலையில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்படுகிறார். ஆனால் அவர் வந்து சேரும்முன்பே திருக்கல்யாணம் நடந்து முடிந்து விடுகிறது.

கள்ளழகர் வைகை ஆற்றின் வடகரைக்கு வரும்போது, மீனாட்சி அம்மனுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக தகவல் கிடைக்கிறது. இதனால் கோபம் கொள்ளும் கள்ளழகர் மதுரை மாநகருக்குள் வராமல் வண்டியூர் வழியே மீண்டும் அழகர்மலைக்கு திரும்பிச் சென்று விடுகிறார்.


இவற்றை நினைவுபடுத்தும் விதமாக மதுரையில் சித்திரை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவில் மீனாட்சி கல்யாணம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்குதல் என இரு முக்கிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்விழாவினைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் மதுரைக்கு வருகை தருகிறார்கள்.

பத்தாம் நாள் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணமும், 11-ம் நாள் தேரோட்டமும் நடைபெறும். சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில், அழகர் எழுந்தருளும் வைபவம் நடக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்